‘தலைவன் தலைவி’ உருவான கதை: இயக்குநர் பாண்டிராஜ் விளக்கம்

5 months ago 6
ARTICLE AD BOX

விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘தலைவன் தலைவி’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். ஜூலை 25-ம் தேதி வெளியாகிறது.

படம் பற்றி இயக்குநர் பாண்டிராஜ் கூறியதாவது: இந்தப் படத்தின் தலைப்பு தோன்றிய தருணமும் இந்தப் படத்துக்கான கதை தோன்றிய சம்பவங்களும் அழகானது. ஓர் உண்மை சம்பவத்திலிருந்து இந்த கதையை எழுதி இருக்கிறேன். என் மகனுடைய பிறந்தநாள் விழாவுக்காகக் குலதெய்வ கோயிலுக்குச் சென்ற போது நான் சந்தித்த இரண்டு கதாபாத்திரங்கள் ஆகாச வீரன் - பேரரசி. நேரில் பார்த்ததைப் படமாக எடுக்க முடியாது. ஆனால் இப்படி இருந்தால், எப்படி இருக்கும்? என்ற ஒரு கேள்விதான் இந்த கதாபாத்திரம். அதன் பிறகு இதை எழுதத் தொடங்கினேன்.

Read Entire Article