ARTICLE AD BOX
Robo Shankar : விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் ரோபோ சங்கர். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளி திரையிலும் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இதைத் தொடர்ந்து மது பழக்கத்திற்கு அடிமையாகி மோசமான நிலைக்கு சென்றுவிட்டார். இப்போது தான் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து இருக்கிறார். இதை அடுத்து அவரது குடும்பம் யூட்யூபில் வீடியோ போட்டு வருகின்றனர்.
தற்போது ரோபோ சங்கரை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து பதிவு போட்டு வருகிறார். சமீபத்தில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது தாய்ப்பாலில் மகனுக்கு தாயத்து செய்திருந்தார். அதன் பிறகு ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா தனது பேரனின் பெயரை பச்சை குத்தி வீடியோ போட்டு இருந்தார்.
ரோபோ சங்கரை வெளுத்து வாங்கிய பிரபலம்
blue-sattai-maranஇந்த வீடியோக்கள் ஓரளவு நல்ல வீவ்ஸ் பெற்றது. ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் ரோபோ சங்கரின் இம்சை தாங்க முடியவில்லை என கதறி இருக்கிறார். அதாவது காலைல கோழி கூவுற காமெடி மட்டும்தான் ரோபோ சங்கருக்கு அடையாளம்.
மற்ற காமெடிகள் எதுவும் எடுபடாததால் சிவகார்த்திகேயன் அவரை கழற்றி விட்டார். இப்போது யூடியூப் சேனல் இவரை மொத்தமாக லீசுக்கு எடுத்து விட்டனர். மருமகன் முதல் குடும்பத்தில் உள்ள அனைவரும் வீடியோக்களில் வருகின்றனர்.
கல்யாணம், வளைகாப்பு, ஷாப்பிங் என 24 மணி நேரமும் இவர்களின் அசைவையும் வீடியோக்களில் போட்டு அறுக்கிறார்கள். அதோடு புது படம் வந்தால் இவர்கள்தான் செலிபிரிட்டி ஷோவுக்கு ஆஜராகி விடுகிறார்கள். ரோபோ சங்கர் அவரது பேரனை வைத்து வீடியோக்கள் போட்டு வருகிறார்.
தாத்தா ஆனா பிறகும் திருந்தவில்லை என்றால் ஒன்றும் சொல்வதற்கு இல்லை என கடுமையாக சாடி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

7 months ago
8





English (US) ·