தாம்பரத்தில் ஆட்டோ ஸ்டாண்டில் மோதல்; ஓட்டுநர் கொலை: 5 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை

3 months ago 4
ARTICLE AD BOX

தாம்​பரம்: தாம்​பரத்தை அடுத்த குறிஞ்சி நகர், வி.ஜி.என். குடி​யிருப்​பில் நேற்று முன்​தினம் இரவு காலி இடத்​தில் தலை, முகம், கைகளில் பலத்த வெட்டு காயங்​களு​டன் இளைஞர் ஒரு​வர் கொலை செய்​யப்​பட்டு கிடப்​ப​தாக தாம்​பரம் போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. உடனே போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து விசா​ரணை நடத்​தினர்.

இளைஞரின் உடலை மீட்டு தாம்​பரத்​தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். தொடர்ந்து அருகே நின்​றிருந்த ஆட்​டோவை சோதனை செய்த​தில் அதில் ரத்​தக்​கரை இருந்​தது தெரிந்​தது. தொடர் விசா​ரணை​யில் கொலை செய்​யப்​பட்ட இளைஞர், குரோம்​பேட்​டை, துர்கா நகரை சேர்ந்த வினோத்​கு​மார் என்​கிற ஆத்தா வினோத் (28) என்​பது தெரிய​வந்தது.

Read Entire Article