தாம்பரத்தில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை அமோகம்: தட்டி கேட்டால் அடி, உதை - நடப்பது என்ன?

9 months ago 9
ARTICLE AD BOX

கிழக்கு தாம்​பரம் சேலை​யூரில் ஒரு நம்​பர் லாட்​டரி விற்​பனை கூலி தொழிலா​ளி​களை குறி​வைத்து அமோக​மாக நடை​பெறுகிறது. இதைத் தட்டி கேட்​டால் தாக்​குதல் சம்​பவங்​கள் அரங்​கேற்​றப்​படு​கிறது. தமிழகத்​தில் லாட்​டரி சீட்​டு​களால் குடும்​பங்​கள் பாதிக்​கப்​பட்டு பலர் தற்​கொலை வரை சென்​ற​தால் லாட்​டரி விற்​பனைக்கு அரசு தடை விதித்​துள்​ளது.

ஆனால் கிழக்கு தாம்​பரம் சேலை​யூர் மற்​றும் சுற்​றுப்​பகு​தி​களில் நம்​பர் லாட்​டரி விற்​பனை அமோக​மாக நடப்​ப​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. கிழக்கு தாம்​பரம், காந்தி நகர் பூங்​கா, சேலை​யூர், காம​ராஜபுரம் பேருந்து நிறுத்​தம், வேங்​கை​வாசல், சேலை​யூர், மாடம்​பாக்​கம் காவல் நிலை​யம் பின்​புறம் என பல்​வேறு பகு​தி​களில் லாட்​டரி கும்​பல் ரகசி​ய​மாக, திறந்​தவெளி​யில் விற்​பனை செய்து வரு​கிறது.

Read Entire Article