``திமுகவை இன்று ஆதரிக்க வேண்டிய தேவை இருக்கிறது, ஏனென்றால்'' - அமீர் விளக்கம்

4 months ago 6
ARTICLE AD BOX

திரைப்பட இயக்குநர் அமீர் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அவர், "இவர்கள் எல்லாம் திமுக ஆதரவாளர்கள். திமுகவை எதிர்த்து பேசவே மாட்டார்கள் என்று என்னை சொல்வார்கள்.

ஒரு திரைப்பட இயக்குநராக அறியப்பட்ட நான் திமுகவை எதிர்த்துதான் பொதுவாழ்க்கைக்கே வந்தேன்.

ஆணவக் கொலைஆணவக் கொலை

அன்று எதிர்க்க வேண்டிய தேவையும் இருந்தது. அதேபோல, இன்று ஆதரிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

அதற்கு காரணம் பாசிச, சனாதனக் கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டும் என்பதற்காகத் தான்.

ஓட்டு போடுவதும், ஓட்டு வாங்குவதும் எப்படி ஜனநாயகமோ, அதேபோல ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் அரசைக் கேள்வி கேட்பதும் ஜனநாயகம்தான்.

Aamir Khan: `என்னுடைய கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும்' - கூலியில் நடிப்பதை உறுதி செய்த அமீர் கான்

அந்த அடிப்படையில் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டியது திராவிட முன்னேற்ற கழகத்தின் கட்டாயக் கடமையாக இருக்க வேண்டும். அதற்காக தொடர்ந்து போராடுவோம்.

இந்தச் சட்டம் நிறைவேறும் வரைக்கும் தொடர்ந்து போராடிக்கொண்டு இருப்போம்.

ஆணவக்கொலையில் நான் பார்க்கும் விஷயம் என்னவென்றால், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்பதால் கொலைகள் நடப்பதில்லை.

இயக்குநர் அமீர்இயக்குநர் அமீர்

'நான் தான்' என்ற உயரிய அகங்காரத்தினால்தான் இதுப்போன்ற கொலைகள் நடக்கிறது. இது ஒரு நோய். இந்த நோய் கலையப்பட வேண்டும்.

ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து தொடர்ந்து இதற்காக நாம் போராடுவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

Aamir Khan: ``அந்தக் கதையை திரையில் கொண்டுவருவதுதான் என் கனவு''- நெகிழும் அமீர் கான்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Read Entire Article