ARTICLE AD BOX

திருச்சி: திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற அரசு பேருந்து மீது பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் தாய், குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப்(21). சென்னையில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். தென்காசியில் ஆக.30-ம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ஜோசப் பங்கேற்றுவிட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு ஆலங்குளத்தில் இருந்து காரில் புறப்பட்டு உள்ளார்.
அப்போது, ஜோசப்பின் நண்பர்களான ஆலங்குளத்தைச் சேர்ந்த செல்வகுமார்(37), அவரது மனைவி யசோதா(29), இவர்களது மகள் அனோனியா(2), மற்றொரு நண்பரான விஜயபாபு (31) ஆகியோரும் உடன் சென்றனர். இவர்கள் நேற்று அதிகாலை 2 மணியளவில், திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்த நெடுங்கூர் அருகே சென்றபோது, அங்கு பழுதாகி நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின் பகுதியில் கார் பயங்கரமாக மோதியது.

4 months ago
5







English (US) ·