திருச்சியில் சென்னை நகை கடை ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி 10 கிலோ நகை கொள்ளை

3 months ago 5
ARTICLE AD BOX

திருச்சி: ​திருச்சி சமயபுரம் அருகே சென்னை நகைக் கடை ஊழியர்​கள் மீது மிள​காய்ப் பொடியை தூவி, 10 கிலோ தங்க நகைகள் கொள்​ளை​யடிக்​கப்​பட்​டுள்​ளன. சென்னை சவு​கார்​பேட்​டை​யில் உள்ள நகைக் கடை மேலா​ளர் பிரதீப்​ஷாட்​(40) மற்​றும் ஊழியர்​கள் இரு​வர் காரில் சென்​னை​யில் இருந்து திண்​டுக்​கல் சென்​றனர். அங்கு நகைகளை விற்​பனை செய்த பின்​னர், மீதமிருந்த 10 கிலோ தங்க நகைகளு​டன் சென்னைக்குப் புறப்பட்டனர்.

திருச்சி மாவட்​டம் சமயபுரம் அரு​கே​யுள்ள சிறுக​னூர் பகு​தி​யில் காரை சாலை​யோரம் நிறுத்​தி​விட்​டு, சிறுநீர் கழிக்​கச் சென்​றனர். அப்​போது மற்​றொரு காரில் வந்த 4 பேர் மேலா​ளர், ஊழியர்​கள் மற்​றும் கார் ஓட்​டுநர் மீது மிள​காய்ப் பொடியைத் தூவி, காரிலிருந்த 10 கிலோ தங்க நகைகளைக் கொள்​ளை​யடித்​துக் கொண்டு தப்​பிச் சென்​றனர். கொள்​ளை​யடிக்​கப்​பட்ட நகை​களின் மதிப்பு சுமார் ரூ.12 கோடி என்று கூறப்படுகிறது.

Read Entire Article