ARTICLE AD BOX

திருப்பதி அருகே நேற்று நடந்த பயங்கர சாலை விபத்தில் ஓசூரை சேர்ந்த 5 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் விகாஸ் நகரைச் சேர்ந்த தியாகராஜன் குடும்பத்தினர் காரில் திருப்பதிக்கு வந்துள்ளனர். இவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு, நேற்று மீண்டும் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, திருப்பதி - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சந்திரகிரி தோட்டபல்லி எனும் இடத்தில், அதிவேகமாக முன்னால் சென்ற ஒரு கண்டெய்னர் லாரியை முந்திச் செல்ல அந்தக் கார் முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிரே மற்றொரு வாகனம் வந்ததால், நிலை தடுமாறி, கண்டெய்னரின் பின்புறம் அந்த கார் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த தியாகராஜன் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்தனர்.

8 months ago
8







English (US) ·