ARTICLE AD BOX
Vijay tv: கலி முத்திடுச்சு, உலகம் எதை நோக்கி போகுதுன்னு தெரியல என அந்த காலத்து மனுஷங்க எல்லாம் ஆதங்கத்தோடு பேசுகின்றனர். அப்படித்தான் நம் டிஜிட்டல் இந்தியா இருக்கிறது.

உலகம் கையளவில் என்று சொல்லியே பக்கத்தில் நடக்கும் விஷயங்கள் கூட யாருக்கும் தெரியாமல் போகிறது. அந்த அளவுக்கு சோசியல் மீடியா அனைவரையும் வசியம் செய்து வைத்திருக்கிறது.
அதேபோல் சாமானிய மக்களும் சோசியல் மீடியா மூலம் சம்பாதிப்பதற்காக பல வேலைகளை பார்த்து வருகின்றனர். இதில் சினிமா பிரபலங்கள் ஒரு படி மேலே போய் புதுப்புது ஷாக் கொடுத்து வருகின்றனர்.
விஜய் டிவி சீரியல் ஹீரோயினா இது.!
அப்படித்தான் விஜய் டிவியின் விக்ரம் வேதா சன் டிவியின் மலர் சீரியலில் நடித்த அஸ்வதி அக்னிஹோத்ரி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் மலையாள சீரியல் நடிகையான ஷெஹானஸ் ஹுசைனுக்கு தாலி கட்டுகிறார். அதே போல் அவரும் அஸ்வதிக்கு தாலி கட்டுகிறார். இருவரும் மாலையும் கழுத்துமாக மணப்பெண் கோலத்தில் இருக்கின்றனர்.
அதன் பிறகு ஒருவர் காலை ஒருவர் தொட்டு கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கி கொள்கின்றனர். பின் திருமண ரிசப்ஷன் மேடையில் இருவரும் கழுத்தில் தாலியுடன் மாலை அணிந்து ஒன்றாக நிற்கின்றனர்.
இந்த வீடியோவை பார்த்த பலருக்கும் குழப்பம் தான். உண்மையிலேயே இரு நடிகைகளும் திருமணம் செய்து கொண்டார்களா அல்லது ஏதாவது விளம்பர சூட்டிங்கா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மற்றொரு பக்கம் இப்போது இதெல்லாம் சகஜமாகிவிட்டது. இரண்டு ஆண்களின் வாழ்க்கை காப்பாற்றப்பட்டு விட்டது என நெட்டிசன்கள் குறும்பாக கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

8 months ago
8





English (US) ·