திரும்பி வராத வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக தற்காலிக வீரர்களுக்கு பிசிசிஐ அனுமதி - IPL 2025

7 months ago 8
ARTICLE AD BOX

ஜோகன்னஸ்பர்க்: இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி பாதியில் நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் வரும் 17-ம் தேதி மீண்டும் தொடங்கும் என பிசிசிஐ கடந்த 12-ம் தேதி அறிவித்தது. திருத்தியமைக்கப்பட்ட ஐபிஎல் அட்டவணையின்படி லீக் ஆட்டங்கள் வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்று 29, 30 மற்றும் ஜூன் 1-ம் தேதியும் இறுதிப் போட்டி 3-ம் தேதியும் நடைபெறுகின்றன.

இதனால் வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ள வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் திருப்பி அனுப்ப நடடிவக்கை எடுக்கும்படி ஐபிஎல் அணிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் திருத்தி அமைக்கப்பட்ட ஐபிஎல் அட்டவணையானது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது.

Read Entire Article