ARTICLE AD BOX

தொழிலதிபர் ‘லெஜெண்ட்’ சரவணன் தயாரித்து நடித்த படம், ‘லெஜெண்ட்’. 2022-ம் ஆண்டு வெளியான இந்தப்படத்தை ஜேடி- ஜெர்ரி இயக்கி இருந்தனர். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை துரை. செந்தில்குமார் இயக்குகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதில் பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா, பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஜிப்ரான் இசையமைக்கிறார். எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் பற்றி ‘லெஜெண்ட்’ சரவணன் கூறும்போது, “படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மாஸ், ஆக் ஷன், சஸ்பென்ஸ், த்ரில்லர் கதையாக, இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் இருக்கும். தீபாவளிக்கு, வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

6 months ago
7






English (US) ·