தீவிர ரசிகன் டூ தீரா பகைவன்.. விஜய்க்காக ஏங்கிய உதயநிதியின் மறுபக்கம்!

7 months ago 8
ARTICLE AD BOX

Vijay: 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் போட்டி திமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு தான் என விஜய் அடித்து சொல்லியிருந்தார்.

இதை விஜய் vs உதயநிதி ஸ்டாலின் என நாம் எடுத்துக் கொள்வது தான் சரி. விஜய் கோயம்புத்தூரில் ரோடு ஷோ நடத்தி கவனத்தை ஈர்த்த அதே நேரத்தில் உதயநிதி ரோடு ஷோ நடத்தியது இவர்களுடைய பகையை தான் உறுதி செய்தது.

தீவிர ரசிகன் டூ தீரா பகைவன்

இன்று பரம்பரை பகையாளியாக நடந்து கொள்ளும் இவர்கள் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்கள். உதயநிதி ஸ்டாலின் ஒரு காலகட்டத்தில் நடிகர் விஜயின் தீவிர ரசிகராக இருந்தவர்.

Red Giant நிறுவனத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்த பிறகு தான் இவர்களுடைய பிரச்சனை ஆரம்பித்தது.

தான் தயாரிக்கும் முதல் படத்தில் விஜய் தான் நடிக்க வேண்டும் என போராடி அதை சாதித்து முடித்தார் உதயநிதி ஸ்டாலின்.

ஆனால் குருவி பட படப்பிடிப்பு சமயத்திலேயே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. போதாத குறைக்கு படம் பெரிய அளவில் பொருளாதார நஷ்டமும் அடைந்தது.

vijay-udhayanithivijay-udhayanithi

சில வருடங்கள் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பேச்சு வார்த்தையே இல்லாமல் இருந்திருக்கிறார்கள்.

அதன் பின்னர் ஒரு கட்டத்தில் உதயநிதி நேரடியாக விஜய் வீட்டிற்கு சென்று பிரச்சனையை சமாதானம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

இவ்வளவு தீவிர ரசிகனாக இருந்த உதயநிதி இன்று அரசியல் கட்டாயத்தால் தனக்கு பிடித்த ஹீரோவை எதிர்த்து நிற்கும் நிலைக்கு வந்திருக்கிறார்.

Read Entire Article