துருவ் ஜூரெல் சதம் விளாசல்: இந்தியா ‘ஏ’ அணி பதிலடி

3 months ago 5
ARTICLE AD BOX

லக்னோ: ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணிக்கு எதி​ரான அதி​காரப்​பூர்​வ​மற்ற முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​தியா ‘ஏ’ அணி 403 ரன்​கள் குவித்​தது. விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான துருவ் ஜூரெல் சதம் விளாசி​னார்.

லக்​னோ​வில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் ஆஸ்​திரேலியா ‘ஏ’ அணி முதல் இன்​னிங்​ஸில் 98 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 532 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. இதையடுத்து விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 30 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 116 ரன்​கள் எடுத்​தது. நாராயண் ஜெகதீசன் 50, சாய் சுதர்​சன் 20 ரன்​களு​டன் நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடி​னார்​கள்.

Read Entire Article