ARTICLE AD BOX

லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு ஆஸ்திரேலியாவை 212 ரன்களுக்குச் சுருட்டியதில் ஆச்சரியமொன்றுமில்லை, ஏனெனில் இதற்கு முதல் தொடரில் பும்ரா அண்ட் கோ ஆஸ்திரேலிய பேட்டிங்கை கலங்கடித்ததனால் ஆஸ்திரேலிய பேட்டிங் பலவீனங்கள் வெட்ட வெளிச்சமாகியது. ஆனால், தென் ஆப்பிரிக்கா பேட்டிங் சரிவுக்கு ஆஸ்திரேலியாவின் துல்லிய பவுலிங் மட்டும் காரணமல்ல.
ஐசிசி ஃபியூச்சர் டூர் புரொகிராம் என்னும் ஷெட்யூலில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே அதிக டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. மற்றபடி தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, வங்கதேசம், மே.இ.தீவுகள் போன்ற நாடுகளுக்கு அவ்வளவாகப் போட்டிகள் நடைபெறுவதில்லை ஒன்று அவர்கள் அவர்களுக்குள் ஆடுகிறார்கள், அல்லது இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் குறைந்த அளவிலேயே மோதுகின்றனர்.

6 months ago
7







English (US) ·