தேர்தல் நடத்தினால் நடிகர் சங்க கட்டிட கட்டுமானப் பணிகள் பாதிக்கும்: விஷால் பதில் மனு

6 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தினால் சங்க கட்டிட கட்டுமான பணிகள் பாதிக்கப்படும். எனவே நிர்வாகிகளின் பதவிக் காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது, என்று நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க சட்ட திட்டத்தின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது.

Read Entire Article