ARTICLE AD BOX
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, இந்தி மற்றும் பெங்காலி மொழி என மொத்தம் 6 மொழி (நேரடி) திரைப்படங்களில் நடிகர் கமல் ஹாசன் நடித்துள்ளார்.
நடிகர் கமல் முதன் முதலாக நடித்த திரைப்படம் களத்தூர் கண்ணம்மா. தமிழ் மொழியில் உருவான இத்திரைப்படத்தில் கமல், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்
மலையாள மொழியிலும் நடிகர் கமல் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமானார். கண்ணும் கரலும் (1962) எனும் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் பல்வேறு நேரடி படங்களில் நடிகர் கமல் நடித்தார்.
1973-ஆம் ஆண்டு தமிழில் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அரங்கேற்றம் திரைப்படத்தின் இந்தி பதிப்பான ஆய்னா; இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றி தனது பாலிவுட் அறிமுகத்தை பதிவு செய்தார் கமல்!
இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் தெலுங்கு மொழியில் 1976-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்துலேனி கதா. இத்திரைப்படத்தில் நடிகர் சிறப்பு தோற்றத்தில் தோன்றி தனது டோலிவுட் அறிமுகத்தை பதிவு செய்தார்.
1974-ஆம் ஆண்டு தமிழில் வெளியான அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தின் பெங்காலி மொழி ரீமேக் கபிதா. இத்திரைப்படத்தில் நடிகர் கமல் சிறப்பு தோற்றத்தில் தோன்றி தனது வங்காள திரைப்பட அறிமுகத்தை பதிவு செய்தார்.
இதே 1977-ஆம் ஆண்டு ‘பாலு மகேந்திராவின்’ கோகிலா திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் கால் பதித்தார் கமல் ஹாசன். இத்திரைப்படம் பாலு மகேந்திராவை இயக்குனராக அறிமுகம் செய்த திரைப்படம் ஆகும்.
நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வசனம் இன்றி (மொழி இன்றி) உருவான திரைப்படம் புஷ்பக விமானம். 35 லட்சம் பொருட்செலவில் உருவான இத்திரைப்படம், 1 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது!
Thanks For Reading!








English (US) ·