ARTICLE AD BOX

மதுரை: நடிகர் சங்கக் கட்டிடம் தாமதத்துக்கு நான் காரணம் இல்லை என அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் தெரிவித்தார். மதுரையில் நேற்று ரசிகர் மன்ற நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் விஷால், மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகர் சங்கக் கட்டிடம் தாமதமாக கட்டப்பட்டதற்கு நான் காரணம் இல்லை. 6 மாதங்களில் முடிக்க வேண்டிய கட்டுமானப் பணி, நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தால் 3 ஆண்டுகள் தாமதமாகிவிட்டது. தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் நான்கு மாதங்களில் கட்டிடம் பெரிதாகிவிடும்.

7 months ago
10





English (US) ·