நடுக்கடலில் 600 லி. பெட்ரோலுடன் ஃபைபர் படகு பறிமுதல் - இந்திய கடலோர காவல் படை விசாரணை

7 months ago 8
ARTICLE AD BOX

ராமேசுவரம்: முயல் தீவு அருகே நடுக்கடலில் 600 லிட்டர் பெட்ரோலுடன் நின்று கொண்டிருந்த ஃபைபர் படகை கைப்பற்றிய இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத் துறையினர், படகிலிருந்த மூவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் இருந்து ராமேசுவரம் அருகே மண்டபம் கடலோரப் பகுதிக்கு படகு மூலம் கடத்தல் பொருள் கொண்டுவரப்படுகிறது என சுங்கத் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலை தொடர்ந்து, மண்டபம் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடலோர காவல் படையினருடன் இணைந்து சுங்கத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடுக்கடலில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த ஃபைபர் படகு ஒன்றை சோதனை செய்தனர். அந்தப் படகில் சுமார் 600 லிட்டர் பெட்ரோல், கேன்களில் இருப்பது தெரியவந்தது.

Read Entire Article