நட்பு ரீதியிலான கால்பந்தில் இந்தியா - தாய்லாந்து ஜூன் 4-ல் மோதல்

7 months ago 8
ARTICLE AD BOX

புதுடெல்லி: இந்திய ஆடவர் கால்பந்து அணி வரும் ஜூன் 4-ம் தேதி தாய்லாந்துக்கு எதிராக சர்வதேச நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் என்று அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎஃப்எஃப்) நேற்று அறிவித்தது.

'ப்ளூ டைகர்ஸ்' என அழைக்கப்படும் இந்திய கால்பந்து அணி தற்போது ஏஎஃப்சி ஆசிய கோப்பை 2027 தகுதிச் சுற்று இறுதிகட்ட போட்டியில் பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரில் வரும் ஜூன் 10-ம் தேதி ஹாங்காங்குடன் இந்திய அணி மோத உள்ளது. இந்த ஆட்டத்துக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்கு தாய்லாந்து அணிக்கு எதிரான நட்புரீதியிலான ஆட்டம் உதவக்கூடும்.

Read Entire Article