ARTICLE AD BOX
Sara Arjun: சினிமாவில் மட்டும் தான் இதெல்லாம் நடக்கும். மகளாக நடித்தவர் அந்த ஹீரோவுக்கு ஜோடியாக நடிப்பார். பிறகு பார்த்தால் அவருக்கே அம்மாவாக நடித்த சம்பவங்கள் கூட இருக்கிறது.

இதெல்லாம் சகஜம் என்றாலும் தற்போது அதிக வயதுடைய ஹீரோக்கள் இளம் நடிகைகளுடன் நடிப்பது சர்ச்சையாக தான் பேசப்பட்டு வருகிறது. அப்படி ஒரு விஷயம் தான் நடந்துள்ளது.

ஆனால் அது கோலிவுட்டில் கிடையாது பாலிவுட்டில். நேற்று ரன்வீர் சிங் தன்னுடைய 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதை முன்னிட்டு அவர் நடித்து வரும் துரந்தர் படத்தின் டீசர் வெளியானது.
நம்ம பேபி சாராவா இது
அதில் தெய்வ திருமகள் படத்தின் மூலம் நமக்கு அறிமுகமான பேபி சாரா ரன்வீர் சிங் ஜோடியாக நடித்துள்ளது தெரிய வந்திருக்கிறது. அதிலும் இருவருக்கும் இடையே நெருக்கமான சீன் இருக்கிறது.
மேலும் சாராவுக்கு 20 வயது தான் ஆகிறது. அவர் இப்போது 40 வயது நடிகருடன் இவ்வளவு நெருக்கமாக நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதேபோல் இந்த விவகாரம் இப்போது பேசு பொருளாகவும் மாறியுள்ளது. இப்படி மூத்த நடிகர்கள் இளம் பெண்களை தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைப்பதை எப்பொழுதுதான் நிறுத்துவார்களோ தெரியவில்லை.
ஆனால் இதை நிச்சயம் ஜீரணிக்க முடியவில்லை என நெட்டிசன்கள் ஒரு பக்கம் புலம்புகின்றனர். மேலும் சாரா தமிழில் கதாநாயகியாக அறிமுகப் போகிறார் என்று நினைத்த நிலையில் இப்படி ஒரு ஷாக் கொடுத்துள்ளார்.

5 months ago
7





English (US) ·