ARTICLE AD BOX

அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்த படம், ‘நித்தம் ஒரு வானம்’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. இதை ரா.கார்த்திக் இயக்கி இருந்தார். இதையடுத்து அவர் இயக்கும் படத்தில் நாகார்ஜுனா ஹீரோவாக நடிக்கிறார். இதை தனது அன்னபூர்ணா ஸ்டூடியோ சார்பில் அவரே தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் நாகார்ஜுனா, நடித்துள்ளார். தனுஷின் ‘குபேரா’ படத்திலும் நடித்திருக்கிறார்.

7 months ago
8





English (US) ·