ARTICLE AD BOX
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக நடிகரும் tvk தலைவருமாக இருக்கும் விஜய் அவருடைய அரசியல் பயணத்தை மும்மரமாக தொடங்கி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே முதல் பிரச்சாரத்தை திருச்சியில் முடித்துவிட்டு இன்று நாகை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு கிளம்பி விட்டார்.
பிரச்சாரம் செய்ய போகும் இடங்கள்
அப்படி tvk விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள போகும் இடங்கள் கீழ்வேளூர் ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி மைதானம், நாகூர் புதிய பஸ் நிலையம், வேளாங்கண்ணி ஆர்ச் போன்ற ஏழு இடங்களில் பிரச்சாரம் செய்ய போவதால் போலீசாரிடம் அனுமதி கேட்டு வைத்திருக்கிறார்கள்.
பாதுகாப்பு நலன் கருதி கேட்ட வேண்டுகோள்
அதாவது புத்தூர் ரவுண்டானா கிழக்கு கடற்கரை சாலையில் பிரச்சாரம் செய்வதற்கு போலீசார் அனுமதி கொடுத்திருந்தாலும் அங்கே உயர் மின் அழுத்த கம்பிகள் செல்வதால் பிரச்சாரம் செய்யும் பொழுது பாதுகாப்பாக இருக்காது என்று பாதுகாப்பு நலன் கருதி அந்த இடத்தை தவிர்த்து பக்கத்தில் இருக்கும் அண்ணா சிலை பகுதியில் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டிருக்கிறார்கள்.
விதிக்கப்பட்ட கண்டிஷன்கள்
ஆனால் போலீஸ் தரப்பில் இருந்து இதற்கு சில காரணங்களை சொல்லி சில கண்டிஷன்களை போட்டு பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கொடுக்காமல் இழுத்து அடித்து வருகிறார்கள். உடனே tvk கட்சியில் இருப்பவர்கள் அங்கே இருக்கும் மாவட்ட போலீசாரிடம் பேசி கட்டுப்பாட்டின்படி அனுமதியை பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் பிரச்சாரம் செய்ய போகும் வாகனத்திற்கு பின் ஐந்து வாகனங்களுக்கு மேல் போகக்கூடாது.
tvk vijay photoஅத்துடன் பிரச்சாரம் செய்யும் இடங்களிலும், போகும் பாதையிலும் எந்த காரணத்தைக் கொண்டும் பட்டாசுகளை வெடிக்க விடக்கூடாது. மேலும் பிரச்சாரம் செய்யும் பொழுது அங்கே இருக்கும் மத்த கட்சியினர் அலுவலகத்தில் இருப்பவர்களை சீண்டிப் பார்க்கும் விதமாக எந்தவித அசம்பாவிதமும் நடக்கக்கூடாது. பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் ஏற்பட்டால் அதற்கும் tvk தலைவர் பொறுப்பேற்க வேண்டும்.
இதனை தொடர்ந்து தலைவர்களின் சிலைகள் இருந்தால் அதில் ஏறி ஆர்ப்பாட்டம் பண்ணக்கூடாது என்று கிட்டத்தட்ட 20 நிபந்தனுடன் போலீசார் அனுமதி வழங்கி இருக்கிறார்கள். முக்கியமாக 12.30 மணியிலிருந்து 1.30 மணி வரை மட்டுமே பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நேரத்தை ஒதுக்கி கட்டுப்பாட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் விஜய் பிரச்சாரம் செய்யும் வாகனம் நாகையில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

3 months ago
5





English (US) ·