ARTICLE AD BOX

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். நாங்குநேரியை அடுத்த தளபதிசமுத்திரம் அருகேயுள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை நாகர்கோவில் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் ஏறி, மறுபுறம் உள்ள சாலைக்கு சென்றது.
நேருக்கு நேர் மோதல்: அப்போது, இந்த கார், அந்த வழியாக நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த மற்றோரு கார் மீது மோதியது. இதில் 2 கார்களும் பலத்த சேதமடைந்தன. கார்களில் இருந்த 4 ஆண்கள், 2 பெண்கள், ஒரு குழந்தை என 7 பேர் பலத்த காயமடைந்தனர். ஏர்வாடி போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

8 months ago
9







English (US) ·