ARTICLE AD BOX
7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025 டிசம்பர் 2 முதல் 6 வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்
இந்திய அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆசிக் ஆகிய 5 பேர் இடம் பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
சென்னை காசிமேட்டை சேர்ந்த முன்னாள் கேரம் சாம்பியன் காசிமா குழுப்போட்டியில் தங்கப் பதக்கமும், தனிநபர் பிரிவில் வெண்கல பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்று மீண்டும் சாதனை படைத்திருக்கிறார்.
கேரம் போட்டியில் தங்கம் வென்ற வீரர், வீரங்கனைகள் நேற்று பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆஷிக் அகிய சென்னை திரும்பினர். சாதனை படைத்துத் திரும்பிய அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் அவர்களின் பெற்றோர், உறவினர்கள் சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய காசிமா, "தனிநபர் பிரிவில் வெண்கல பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கமும், குழுப்போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நானும், கீர்த்தனாவும் ஒரே கிளப்பில் தான் 13 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறோம்.
கேரம் வீராங்கனை காசிமாஇன்று கீர்த்தனா 3 தங்கப் பதக்கங்களை வென்று உலக சாம்பியனாக மாறி இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. கேரம் விளையாட்டு போட்டியை இன்னும் மேம்படுத்தி கொண்டு வர வேண்டும். இதன் மூலம் கிரிக்கெட், செஸ் போட்டிக்கு இனையாக கேரம் வரும். துணை முதல்வர் உதயநிதி சார் எங்களுக்கு உறுதுணையாக இருந்து நிதிஉதவிகள் வழங்கி ஊக்குவித்தார். அவரைப் பார்ப்பதற்கு அனுமதி கிடைத்த உடன் சென்று பார்ப்போம்.'' என்று பேசியிருக்கிறார்.

2 weeks ago
2







English (US) ·