ARTICLE AD BOX

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயஸ் அய்யரை தேர்வு செய்யாமல் விட்டது பலருக்கும் ஆச்சரியமளிப்பதே. ஏனெனில் கேப்டன்கள், சீனியர்கள் இல்லாத அணியில் கேப்டனாகவே கூட ஸ்ரேயஸ் அய்யரை தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், அணியிலேயே இல்லை என்பது பெரிய ஆச்சரியம் என்பதோடு கவுதம் கம்பீர் மீது பலத்த ஐயங்களை எழுப்பக் கூடியதே.
கம்பீர் போன்ற அதாரிட்டேரியன் அணித் தேர்வுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று கூறினால் அது நிச்சயம் நம்பத்தகுந்ததல்ல. ஸ்ரேயஸ் அய்யரை ஏன் தேர்வு செய்யவில்லை என்று கேட்டதற்கு ‘நான் செலக்டர் அல்ல’ என்று ஒற்றை வரியில் அதைப் புறக்கணிக்கிறார் கம்பீர் என்றால் நிச்சயம் குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்ற முதுமொழிக்கேற்ப ஸ்ரேயஸ் அய்யர் தேர்வில் இவரது கையும் இருக்கிறது என்பதே நம் வாசிப்பு.

7 months ago
8







English (US) ·