நான் தீவிர சிவபக்தன்: நடிகர் யஷ்

8 months ago 8
ARTICLE AD BOX

பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணக் கதை திரைப்படமாகி வருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் இதில் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வருகின்றனர். ராவணனாக, யாஷ் நடிக்கிறார். அனுமனாக சன்னி தியோல், சூர்ப்பணகையாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் ராவணனாக யாஷ் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக உஜ்ஜைனியில் உள்ள மஹாகாளேஸ்வர் கோயிலில் நடிகர் யாஷ் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

வழிபாட்டுக்குப் பிறகு அவர் அளித்த பேட்டியில், “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிவபெருமானின் ஆசிவேண்டும் என்பதால் இந்தக் கோயிலுக்கு வந்தேன்.நான் தீவிர சிவபக்தன். அனைவரின் மகிழ்ச்சிக்காகவும் நலத்துக்காகவும் பிரார்த்தனை செய்தேன்” என்றார்.

Read Entire Article