"நான் நடிக்காத கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்!" - பகிர்கிறார் ஆஷிஷ் வித்யார்த்தி

4 months ago 6
ARTICLE AD BOX

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி என அனைத்துப் பக்கங்களிலும் ஆல் ரவுண்டராக வலம் வந்தவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்தி.

வில்லன், குணச்சித்திர வேடங்கள் எனத் தமிழ் சினிமாவில் பல பரிமாணங்களில் தோன்றிய இவர் தற்போது யூட்யூப் சேனல் ஒன்றை வைத்துப் பல இடங்களுக்குப் பயணித்து Vlog செய்து வருகிறார்.

Ashish VidhyarthiAshish Vidhyarthi
Urvashi: ''கேமராவைக் கண்டு அஞ்சி மயங்கி விழுந்திருக்கிறேன்!" - பகிர்கிறார் ஊர்வசி

கடந்த சில வருடங்களாகவே இவர் தேர்வு செய்து நடிக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை இப்போது ரொம்பவே குறைந்திருக்கிறது.

இப்போது குறைவான திரைப்படங்களில் மட்டும் நடிப்பது குறித்து அவருடைய யூட்யூப் சேனலின் சமீபத்திய வீடியோவில் பேசியிருக்கிறார்.

அவர், "பார்வையாளர்களாகிய நீங்கள் அனைவரும் முற்றிலும் சரியாக இருக்கிறீர்கள். இப்போதெல்லாம் நான் முன்பு நடித்ததைப் போலப் பல படங்களில் நடிப்பதில்லை.

அது பற்றி நாடு தெரிந்து கொள்ள விரும்புகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் உங்களில் சிலர் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள்.

நானே இதை ஒப்புக்கொள்கிறேன். நான் ஒரு சிறந்த நடிகன். எனது கரியர் முழுவதும் அற்புதமான கதாபாத்திரங்களைச் செய்தவன். ஆனால் இப்போது எனக்கு இதுவரை வழங்கப்படாத கதாபாத்திரங்களைத் தேடுகிறேன்.

ஆஷிஷ் வித்யார்த்திஆஷிஷ் வித்யார்த்தி

அற்புதமான முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். எனது 30 ஆண்டுக்கால கரியரில், 11 வெவ்வேறு மொழிகளில் 300 படங்களைச் செய்திருப்பதற்கு நான் நன்றியுடன் இருக்கிறேன்.

ஆனால் இப்போது நான் சில நல்ல முதன்மை பாத்திரங்களைச் செய்ய முடிவு செய்திருக்கிறேன். சில நேரங்களில் நாம் உலகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்கிறோம்.

வீட்டில் தனியாக அமர்ந்திருக்கிறோம், ஆனால் நான் மனச்சோர்வுடன் உட்கார்ந்திருக்கப் போவதில்லை. என் வாழ்க்கையில் கசப்புணர்வை வைத்திருக்க மாட்டேன்" எனப் பேசியிருக்கிறார்.

Ashish Vidyarthi Exclusive: "தேசிய விருது வென்றும், கொண்டாட என்னிடம் பணமில்லை" - ஆஷிஷ் வித்யார்த்தி

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article