ARTICLE AD BOX

ஸ்டாவஞ்சர்: நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்றது. 6 வீரர்கள் கலந்து கொண்டு இந்த தொடர் இரட்டை ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்டது. இதன் கடைசி சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான பேபியானோ கருனாவுடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ் 50-வது நகர்த்தலின் போது தோல்வி அடைந்தார்.
தொடக்கத்தில் குகேஷ் பின்தங்கிய நிலையில் இருந்தார். ஆனால் அதன் பின்னர் அவர், மீண்டு வர முயற்சித்த போது கண்மூடித்தமாக செய்த தவறால் தனது வாய்ப்பை நழுவவிட்டு தோல்வியை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் அவர், வெற்றி பெற்றிருந்தால் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருப்பார்.

6 months ago
7







English (US) ·