ARTICLE AD BOX

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிகோலஸ் பூரன், எய்டன் மார்க்ரம் ஆகியோரது அதிரடியால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷுப்மன் கில் 38 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ரன்களும், சாய் சுதர்சன் 37 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 56 ரன்களும் விளாசினர். ஜாஸ் பட்லர் 16, வாஷிங்டன் சுந்தர் 2, ஷேர்பேன் ரூதர்போர்டு 22, ராகுல் டெவாட்டியா 0 ரன்களில் நடையை கட்டினர். ஷாருக் கான் 11, ரஷித் கான் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

8 months ago
8







English (US) ·