ARTICLE AD BOX

சென்னை: நிதி நிறுவனம் நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதால், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர், மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வளசரவாக்கம் அருகே காரம்பாக்கம், பொன்னிநகர், விவேகானந்தர் தெருவில் வசிப்பர் தளபதி பாஸ்கர் (52).
இவர், போரூரில் சிவலிங்கா சிட் ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந் நிறுவனம் நடத்தியதில் பாஸ்கருக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் மிகவும் விரக்தியுடனும், வேதனையுடனும் காணப்பட்டுள்ளார்.

1 month ago
3







English (US) ·