நியூஸிலாந்து உடனான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இங்கிலாந்து!

2 months ago 4
ARTICLE AD BOX

ஆக்​லாந்து: நியூஸிலாந்து - இங்​கிலாந்து அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது டி 20 போட்டி ஆக்​லாந்​தில் நேற்று நடை​பெற்​றது. நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்​தது. 3 பந்​துகள் மட்​டுமே வீசப்​பட்ட நிலை​யில் மழை காரண​மாக ஆட்​டம் நிறுத்​தப்​பட்​டது.

சுமார் 80 நிமிடங்​களுக்கு பிறகு ஆட்​டம் மீண்​டும் தொடங்​கப்​பட்ட நிலை​யில் 14 ஓவர்​களை கொண்ட போட்​டி​யாக நடத்த முடிவு செய்​யப்​பட்​டது. நியூஸிலாந்து அணி தொடர்ந்து விளை​யாடிய நிலை​யில் 3.1 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 38 ரன்​கள் எடுத்​திருந்த போது மீண்​டும் மழை​யால் ஆட்​டம் தடைபட்​டது.

Read Entire Article