ARTICLE AD BOX
'அபிஷேக்கின் நாள்!'
'வருடத்தின் 365 நாள்களில் எதாவது ஒரு நாள் நமக்கு இப்படி அமைந்துவிடும். அந்த நாளில் நாம் எதை செய்தாலும் நமக்கு சாதமாக மட்டுமே நடக்கும்.' அபிஷேக் சர்மா சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில் வர்ணனையில் ராபின் உத்தப்பா இப்படி பேசியிருந்தார்.
ஆம், உண்மையிலேயே அபிஷேக்குக்கு அப்படியான நாளாகத்தான் நேற்றைய நாள் இருந்தது. அவர் செய்த எல்லாமே ஒர்க் அவுட் ஆனது. என்ன செய்ய நினைத்தார்? எல்லா பந்துகளையும் பவுண்டரியாக்க வேண்டும். அந்த ஒரே நோக்கம்தான். அது எவ்வளவுக்கு எவ்வளவு சாத்தியப்பட முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு சாத்தியப்பட்டு விட்டது. ஆரஞ்சு ஆர்மியின் ரசிகர்கள் மட்டுமில்லை. பல தரப்பினரும் அபிஷேக் சர்மாவை கொண்டாடி வருகின்றனர்.
அபிஷேக் சர்மா'எதிரணி கேப்டனே கொண்டாடிய இன்னிங்ஸ்!'
'நான் அபிஷேக் சர்மாவின் மிகப்பெரிய ரசிகன்!' என்கிறார் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ். 'அபிஷேக் சர்மா ஆடியது 'Out Of The World Innings' என புகழ்ந்திருக்கிறார் எதிரணியின் கேப்டனான ஸ்ரேயாஷ் ஐயர். அபிஷேக் சர்மா பேட்டிங் ஆடிய போதுமே ஹெட் அவருக்கு செகண்ட் ஃபிடில் ஆடி கொஞ்ச நேரம் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். ஹெட் அவுட் ஆகி, க்ளாசென வந்த போதும் அதே கதைதான். சிங்கிள் எடுத்து அபிஷேக்குக்கு ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொடுத்துக் கொண்டே இருந்தார்.
Abhishek Sharma: `கடந்த 4 நாள்களாக கடும் காய்ச்சல், ஆனாலும்..!' - அபிஷேக் சர்மா நெகிழ்ச்சி!அபிஷேக் 55 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டரிக்களையும் 10 சிக்சர்களையும் அடித்திருந்தார். அதாவது, பவுண்டரிக்களில் மட்டுமே சதத்தைத் தாண்டிவிட்டார்.கிட்டத்தட்ட ஒவ்வொரு இரண்டு பந்துகளுக்கும் ஒரு பவுண்டரி. இப்படி ஒரு அட்டாக்கிங் மனநிலையில் ஆடிக்கொண்டிருக்கும் பேட்டரை எப்படி கட்டுப்படுத்த முடியும்? அடிக்கிற வேகத்தில் அபிஷேக்கே சில வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், அதையும் பஞ்சாப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நோ-பால், ரன் அவுட் மிஸ், கேட்ச் டிராப் என சொதப்பிக் கொண்டே இருந்தனர்.
அபிஷேக் சர்மாவின் பெற்றோர்நடப்பு சீசனின் மிகச்சிறந்த கேப்டன்களுள் ஒருவர் ஸ்ரேயாஷ் ஐயர். ஆனால், அவராலயே அபிஷேக்கிற்கு எதிராக ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஒரே ஓவரில் பீல்டிங்கை பல முறை மாற்றி பார்த்தார், பலனளிக்கவில்லை. சஹாலை வழக்கம் போல ஷாட் ஆட ஏதுவாக வீச சொல்லி பொறி வைத்து பிடிக்கலாம் என நினைத்தார். அதுவும் நடக்கவில்லை. இறுதியில் எப்படியாவது யாராவது விக்கெட் எடுத்து கொடுத்தால் போதும் என்ற மனநிலையில் 8 பௌலர்களை ஸ்ரேயாஷ் பயன்படுத்தி விட்டார். அப்படியும் பலனில்லை. போட்டியை முழுமையாக மாற்றிவிட்டுதான் அபிஷேக் ஓய்ந்தார்.
அத்தனை பேரையுமே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது அவர் ஆடியிருக்கும் இந்த ஆட்டம்.
Abhishek Sharma : 'சதமடித்து விட்டு துண்டு சீட்டை காட்டிய அபிஷேக் சர்மா!' - என்ன சொல்ல வருகிறார்?இதையெல்லாம் கடந்து அபிஷேக்கின் இந்த ஆட்டம் சன்ரைசர்ஸ் அணிக்கும் பேட் கம்மின்ஸூக்கும் புதிய தெம்பையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. இங்கிலாந்தின் 'Baz Ball' அணுகுமுறையைத்தான் சன்ரைசர்ஸ் அணியில் கம்மின்ஸ் கடைப்பிடித்தார். எதிரணி, பிட்ச், சூழல் என எதையும் மனதில் வைக்காமல் ஒரே பரிமாணத்தில் அதிரடியாக பவுண்டரிக்களை குறிவைத்து மட்டுமே ஆட வேண்டும். சில சீசன்களாக தோற்று தோற்று புள்ளிப்பட்டியலில் கீழேயே இருந்தது சன்ரைசர்ஸ் அணி. கேப்டன்களுக்கும் அணி நிர்வாகத்துக்குமே பிரச்சனை ஏற்பட்டது.
Abhishek Sharma'கம்மின்ஸின் நம்பிக்கை!'
அந்த சமயத்தில்தான் பேட் கம்மின்ஸ் புதிய கேப்டனாக வந்து அதிரடி அணுகுமுறையை அணிக்குள் புகுத்தினார். அதற்கு பலனும் கிடைத்தது. கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ரன்னர் அப் ஆனது. இந்த சீசனிலும் அதே அணுகுமுறையோடுதான் உள்ளே வந்தனர். ஆனால், ரிசல்ட் கடந்த சீசனை போல இல்லை. தொடர் தோல்விகளே கிடைத்தது. பேட் கம்மின்ஸே கொஞ்சம் மிரண்டு போனார். தோல்விகளுக்கு காரணமாக சன்ரைசர்ஸின் தடாலடியான அணுகுமுறையே முன்வைக்கப்பட்டது. அதில் நியாயமும் இருந்தது. ஒரு கட்டத்தில் பேட் கம்மின்ஸே குழப்பத்தில் ஆழ்ந்தார். எங்களின் அணுகுறையை மாற்றுவது பற்றி யோசிக்க வேண்டும் என வெளிப்படையாகவே பேசினார்.
Abhishek Sharmaஇப்படியொரு சமயத்தில்தான் அபிஷேக் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார். இது அவருக்கு மட்டுமில்லை. ஒட்டுமொத்த அணிக்குமே இந்த சமயத்தில் தேவைப்பட்ட இன்னிங்ஸ். குறிப்பாக, பேட் கம்மின்ஸூக்கு அவர் நம்பும் வழி சரிதான் எனும் பிடிப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இன்னிங்ஸ் இது.

8 months ago
8







English (US) ·