ARTICLE AD BOX
Memes: கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் தக் லைஃப் பட பிரச்சினை தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. தமிழில் இருந்து வந்தது தான் கன்னட மொழி என கமல் குறிப்பிட்டிருந்தார்.

அதுதான் இவ்வளவு அலப்பறைக்கும் காரணம். மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் படம் வெளியாகாது என தொடர் எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன் என கமல் மன்னிப்பு கேட்காமல் தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். நீதிமன்றம் வரை இந்த பிரச்சனை சென்றது.

நீதிபதி சொல்லியும் கூட ஆண்டவர் நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என விளக்கம் மட்டும் கொடுத்தார். ஆக மொத்தம் இவர் மன்னிப்பு கேட்க மாட்டார் என்பது தெரிந்து விட்டது.

அது மட்டுமா கர்நாடகாவில் படம் வெளியாகாது தள்ளி வைக்கிறோம் என்று கூட அறிவித்துவிட்டார். இதையெல்லாம் பார்த்து ஆடிப்போன கர்நாடகா வர்த்தக சங்கம் இப்போது இறங்கி வந்துள்ளனர்.

படம் இங்கு வெளியாக எங்களுக்கு விருப்பம் இருக்கிறது. ஏகப்பட்ட கமல் ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என சப்பை கட்டு கட்டுகின்றனர்.

அப்படி வாங்க வழிக்கு என இதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். அதேபோல் இந்த பிரச்சனையில் ஜனநாயகன் படத்தை உள்ளே கொண்டு வந்ததும் வைரலாகி வருகிறது.
இப்படியாக சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

6 months ago
9





English (US) ·