ARTICLE AD BOX

விக்கெட் வீழ்த்திய பின்னர் நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ராதிக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வி அடைந்தது. 206 ரன்கள் இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 20 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

7 months ago
8







English (US) ·