ARTICLE AD BOX
நடிகர் பிரபு, சுகண்யா நடிப்பில் கடந்த 1993-ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான நகைச்சுவை திரைப்படம் சின்ன மாப்பிளை. இத்திரைப்படம் ஆனது 2011-ஆம் ஆண்டு Adorer Jamai எனும் பெயரில் வங்கதேசத்தில் ரீமேக் செய்யப்பட்டது!
நடிகர் சூர்யா, சமந்தா நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான ஆக்ஷன் ஹிட் திரைப்படம் அஞ்சான். 2018-ஆம் ஆண்டு இத்திரைப்படத்தை Captain Khan எனும் பெயரில் வங்கதேசத்தில் ரீமேக் செய்தனர்.
நடிகர் தனுஷ், பிரகாஷ் ராஜ் நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திருவிளையாடல் ஆரம்பம். இத்திரைப்படத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு Daring Lover எனும் பெயரில் வங்கதேசத்தில் ரீமேக் செய்தனர்!
நடிகர் ஆர்யா, மாதவன் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான ஆக்ஷன் திரைப்படம் வேட்டை. இத்திரைப்படம் கடந்த 2014-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் Hitman எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
நடிகர் சூர்யா, நயன்தாரா நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான திரைப்படம் ஆதவன். இந்தியா & வங்கதேச வங்காள மொழியில் இத்திரைப்படம் கடந்த 2016-ஆம் ஆண்டு Shikari எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
நடிகர் சூர்யா, நயன்தாரா நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் மாஸு. இத்திரைப்படமானது கடந்த 2018-ஆம் ஆண்டு Naqaab எனும் பெயரில் வங்கதேசத்தில் ரீமேக் செய்யப்பட்டது.
நடிகர் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் திரைப்படம் ராவணன். இத்திரைப்படம், Tiger No.1 எனும் பெயரில் கடந்த 2011-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் ரீமேக் செய்யப்பட்டது.
நடிகர் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட தமிழ் திரைப்படம் முதல்வன். இத்திரைப்படமானது வங்கதேசத்தில் Top Hero எனும் பெயரில் கடந்த 2010-ஆம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது.
Thanks For Reading!








English (US) ·