ARTICLE AD BOX

ஐபிஎல் சீசன் 2025-ல் சிஎஸ்கே 4 புள்ளிகளுடன் அட்டவணையில் 10-வது இடத்தில் உள்ளது. ஏறக்குறைய பிளே ஆஃப் வாய்ப்பு இல்லைதான். ஆனாலும் கணித ரீதியாக வாய்ப்பு உள்ளதாக எப்போதுமே ஒரு பேச்சு அடிபடும். அந்த வகையில் பார்த்தாலும் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் மேலும் ஒரு உதை வாங்கினால் அதிகாரபூர்வமாக சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பில்லாமல் வெளியேறிவிடும்.
ஒரு காலத்தில் சிஎஸ்கேவின் கோட்டையாக இருந்த சேப்பாக்கம் மைதானம் இந்த முறை சிஎஸ்கேவின் வீழ்ச்சிக்குக் காரணமாகி விட்டது. மைதானத்தையும் பிட்சையும் குறை கூறி பயனில்லை. அணித்தேர்வு, கேப்டன்சி எல்லாம்தான் கணக்கில் சேரும்.

7 months ago
8







English (US) ·