ARTICLE AD BOX

முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சண்டிகரில் உள்ள முலான்பூர் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளும் நடப்பு சீசனில் 2-வது முறையாக மோதுகின்றன. அதிலும் ஒருநாள் இடைவெளியில் விளையாடுகின்றன. நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி - பஞ்சாப் அணிகள் மோதியிருந்தன. மழை காரணமாக 14 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ்.

8 months ago
8







English (US) ·