பணம் மட்டும் வாழ்க்கை இல்லை.. அப்புறம் 10 கோடி கேட்டு எதுக்கு கேஸ் போட்ட.? ட்ரெண்டிங் மீம்ஸ்

6 months ago 7
ARTICLE AD BOX

Memes: சோசியல் மீடியாவில் இன்று பலவிதமான மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஜனநாயகன் க்ளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது.

அது ஒரு பக்கம் மற்ற படங்களோடு ஒப்பிட்டு கலாய்க்கப்பட்டு வருகிறது. அதை போல் குபேரா படத்தையும் ரசிகர்கள் விட்டு வைக்கவில்லை.

கடந்த இரு நாட்களாகவே இப்படம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் தற்போது நயன்தாராவையும் சேர்த்து இதில் கலாய்த்து வருகின்றனர். எப்படி என்றால் குபேரா படத்தில் தனுஷ் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று சொல்வார்.

அதை வைத்து அப்புறம் எதுக்கு 10 கோடி கேட்டு கேஸ் போட்ட என நயன் கேட்பது போல் மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதே போல் படம் சில நேரத்தில் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

இது எல்லாமே தனுஷ் தரப்புக்கு எதிராக இருக்கும் ரசிகர்கள் செய்யும் வேலை தான். அதிலும் சிவகார்த்திகேயன் சிம்பு ரசிகர்கள் இதை செய்வதாக வெளிப்படையாகவே சில விமர்சகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க படத்துல பணம் வாழ்க்கைக்கு முக்கியம் இல்லன்னு சொல்றீங்க. அப்புறம் எதுக்கு கோடி கணக்கில் சம்பளம் வாங்குறீங்க.

படத்துல முதல் பாதி இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்து இருக்கலாம். அப்ப இரண்டாம் பாதி, அதை எடுக்காமயே இருந்திருக்கலாம். இப்படி பல மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.

Read Entire Article