‘பந்து வீச்சு சொதப்பல்... பொறுமையாக இருங்கள்’ - கம்பீர் வேண்டுகோள்

6 months ago 7
ARTICLE AD BOX

371 ரன்கள் வெற்றி இலக்கை 5-ம் நாளில் இங்கிலாந்து சேஸ் செய்து அபார வெற்றி பெற்று ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் 1-0 முன்னிலை பெற்றது. இதில் இந்திய பவுலிங்கின் போதாமை முழுக்க முழுக்க இங்கிலாந்தினால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் பொறுமை காக்கவும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் .

அதுவும் இந்தியா நம்பியிருக்கும் ஜஸ்பிரித் பும்ரா 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இல்லாமல் முடிந்தது இந்தத் தொடரே இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கான அடையாளமாகத் திகழ்கிறது. அதுவும் பும்ராவை 3 டெஸ்ட் போட்டிகளில்தான் ஆடவைப்பதாக பேச்சு அடிபடும் நிலையில் பந்து வீச்சில் நல்ல தரமான சுழற்பந்து வீச்சாளர் இல்லாததும், சிராஜ் அடி வாங்குவதும், பிரசித் கிருஷ்னா விக்கெட் எடுத்தாலும் ஓவருக்கு 6 ரன்கள் பக்கம் கொடுப்பதும் பெரிய கவலைகளை தருகிறது.

Read Entire Article