பழிக்குப்பழியாக வீட்டிற்குள் புகுந்து கூலி தொழிலாளி வெட்டி கொலை @ சிவகாசி

9 months ago 9
ARTICLE AD BOX

சிவகாசி: சிவகாசியில் பழிக்குப்பழியாக நேற்று இரவு வீட்டிற்குள் புகுந்து கூலித் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆலாவூரணியைச் சேர்ந்த பெருமாள் மகன் சுரேஷ்(27). கூலி தொழிலாளி. இவர் திருமணமாகி மனைவியுடன் சிவகாசி - விளாம்பட்டி சாலையில் உள்ள முனீஸ் நகரில் வசித்து வந்தார். நேற்று இரவு 11 மணி அளவில் சுரேஷ் முனீஸ் நகரில் உள்ள வீட்டில் இருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Read Entire Article