பவுண்டரியே இல்லாமல் சதமெடுத்த ஆஸி.வீரர்: 1977-ல் இந்திய அணிக்கு எதிராக நடந்த சுவாரஸ்யம்!

1 month ago 2
ARTICLE AD BOX

1977-78-ல் பிஷன் சிங் பேடி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. அது ஒரு நெருக்கமான தொடர். அதில் ஆஸ்திரேலியா 3-2 என்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தத் தொடரில்தான் 8 கவுண்டி போட்டிகளில் இந்தியா அங்கு விளையாடியது, 8 போட்டிகளிலும் வென்று சாதனை படைத்தது.

அந்தத் தொடர் ஏன் நெருக்கமான தொடர் என்றால், முதல் 2 டெஸ்ட்களில் ஆஸ்திரேலியா வெல்ல, 3, மற்றும் 4-வது டெஸ்ட்களில் இந்தியா வெற்றி பெற, கடைசி டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் கடைசி இன்னிங்சில் இந்திய அணிக்கு வெற்றி பெற 490 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்திய அணி 445 ரன்களைக் குவித்ததும் மறக்க முடியாது.

Read Entire Article