ARTICLE AD BOX

துபாய்: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இரு அணி கேப்டன்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் நேற்றைய போட்டியின்போது பாகிஸ்தான் கேப்டன் சல்மானுடன் கைகுலுக்க இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் மறுத்துவிட்டார்.
கடந்த ஏப்ரலில் பஹல்காமில் நடந்த கொடூர தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்தியாவின் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு பதிலடி தரப்பட்டது. அந்த சம்பவத்துக்குப் பின்னர் தற்போதுதான் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.

3 months ago
5







English (US) ·