ARTICLE AD BOX
IPL 2025 தொடர் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலால், தாக்குதலுக்கு உள்படும் அபாயம் உள்ள தரம்ஷாலா மைதானத்தில் போட்டிகள் நடக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஐபிஎல் தலைவர் தலைவர் அருண் துமால்.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா நடத்திய ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் எல்லைப்புற மாநிலங்கள் போர் அபாயத்தில் சிக்கியுள்ளன.
PBKS Captain Shreyas Iyerஇந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பல விமானநிலையங்கள் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன. அவற்றில் தரம்ஷாலா விமான நிலையமும் அடக்கம்.
Operation Sindoor: ``15 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு'' - கர்னல் சோபியா குரேஷிபஞ்சாம் கிங்ஸ் அணியின் ஹோம் கிரவுண்டான தரம்ஷாலாவில் இன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியும், வரும் 11-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியும் நடைபெறவுள்ளது.
அருண் துமால், தற்போதைக்கு திட்டமிட்டபடி திட்டமிட்ட நேரத்தில் போட்டிகள் நடத்தப்படும் எனக் கூறியுள்ளார். "மே 11 மும்பை - பஞ்சாப் இடையிலான போட்டி வெகு தொலைவில் இருக்கிறது. அரசு சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டால், மாற்று இடங்கள் குறித்து முடிவு செய்வோம்." என்றும் தெரிவித்துள்ளார்.
மே 11 நடைபெறும் போட்டிக்காக இன்று தரம்ஷாலா செல்லவிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் பயண திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிசிசிஐ-யிடமிருந்து மறு அறிவிப்பாக மும்பை அணி நிர்வாகம் காத்திருக்கிறது.
அருண் துமால்,"போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக மும்பை அணி இன்று பயணிக்கவில்லை. அவர்களை கூட்டி வருவதற்காக மாற்று ஏற்பாடுகளை சிந்தித்து வருகிறோம். இங்கு வருவது மட்டுமல்லாமல் அவர்கள் மீண்டும் ஹோம் கிரவுண்டுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அரசு தரப்பில் ஆலோசனைகள் எதுவும் வரவில்லை என்பதனால், போட்டியில் மாற்றங்கள் எதுவும் இல்லை." எனக் கூறியுள்ளார்.
அரசு அறிவிப்பின் படி, வட இந்தியாவில் அமிர்தசரஸ், பிகானர், சண்டிகர், தர்மஷாலா, குவாலியர், ஜம்மு, ஜோத்பூர், கிஷன்கர், லே, ராஜ்கோட் மற்றும் ஸ்ரீநகர் உள்பட பல விமான நிலையங்கள் மே 10 வரை மூடப்பட்டுள்ளன.
Operation Sindoor: ``நாட்டின் பாதுகாப்பில் சமரசம் கூடாது'' - அனைத்து கட்சி கூட்டத்தில் காங்., திமுக
7 months ago
9







English (US) ·