பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல்; பாதுகாப்பு காரணங்களால் பஞ்சாப் vs டெல்லி போட்டி ரத்து!

7 months ago 8
ARTICLE AD BOX

தர்மசாலாவில் பஞ்சாப் vs டெல்லி ஐ.பி.எல் போட்டி மழை காரணமாக ஒரு மணிநேரம் தாமதமாக சுமார் 8:30 மணியளவில் போட்டி ஆரம்பித்தது. டாஸ் வென்று பெட்டிங்கைத் டெஹ்ரவு செய்த பஞ்சாப் அணி, 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 122 குவித்தது.

பஞ்சாப் vs டெல்லிபஞ்சாப் vs டெல்லி

அடுத்து, நடராஜன் வீசிய 11-வது ஓவரில் முதல் பந்தில் பிரியான்ஷ் ஆர்யா அவுட்டானதும், அடுத்த சில நிமிடங்களில் மைதானத்தின் ராட்சத மின்விளக்கு கோளாறு காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பின்னர்தான், அதேநேரத்தில் ஜம்மு காஷ்மீர் மீது பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல் நடத்திவரும் சம்பவம் வெளியில் தெரியவந்தது. தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில், பாகிஸ்தானின் தாக்குதலை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்து வந்தது.

அதோடு, ஜம்மு காஷ்மீரில் சைரன் ஒலி மூலம் பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் தாக்குதலால் பாதுகாப்பு காரணங்களால் பஞ்சாப் vs டெல்லி போட்டி கைவிடப்பட்டிருக்கிறது.

Locals in Jammu confirming that Pakistan is attacking city using drones and defense is using S-400 to destroy it!!
Not good news! Save the innocent lives ❤️ pic.twitter.com/hZbfIUZ2rE

— Vijay Thottathil (@vijaythottathil) May 8, 2025
இரவில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்; ஜம்மு காஷ்மீரில் ஒலித்த அபாய சைரன்; இந்தியா பதிலடி!
Read Entire Article