பாத் டப்பில் நடிகையுடன் ஜிவி பிரகாஷ்.. வெளியான வித்தியாசமான போஸ்டர்

7 months ago 8
ARTICLE AD BOX

GV Prakash : இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்த ஜிவி பிரகாஷ் தற்போது கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார்கள். அவர் நடிப்பில் வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் தோல்வியை தான் சந்தித்து வருகிறது.

ஆனால் மீண்டும் இப்போது இசை அமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் வீரதீர சூரன், குட் பேட் அக்லி போன்ற படங்களுக்கு இசையமைத்த நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் பராசக்தி மற்றும் விஜய்யின் ஜனநாயகன் ஆகிய படங்களிலும் இசையமைத்து வருகிறார். அதோடு சில படங்களில் கதாநாயகன் ஆகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஜிவி பிரகாஷின் டைட்டில் போஸ்டர்

gv-prakash-immortalgv-prakash-immortal

அந்த வகையில் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் Immortal என்ற பட டைட்டில் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில் பாத் டப்பில் நுரை பொங்க கயாடு லோஹருடன் ஜிவி பிரகாஷ் மது அருந்துவது போல போஸ்டரை வெளியிட்டு இருக்கின்றனர்.

டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் கயாடு லோஹர். இப்போது பெரும்பாலான படங்களில் அவர் தான் கமிட்டாகி வருகிறார். ஜிவி பிரகாஷின் இந்த படம் 2024 இல் தொடங்கப்பட்டது.

இப்போது தான் இதற்கான பணிகள் தீவிரமாக தொடங்கி இருக்கிறது. மேலும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவால் அறிவிக்கப்படும். Immortal போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றிருக்கிறது.

Read Entire Article