ARTICLE AD BOX

துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் நிகழ்வின் போது தொகுப்பாளர்களாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரியும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸும் இடம் பெற்று நேர்காணல்களை நடத்தினர்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முன்னாள் வீரர்கள் இருவர் டாஸில் தொகுப்பாளர்களாக பணியாற்றி நேர்காணல் நடத்துவது இதுவே முதன்முறையாகும். இதற்கு காரணம் பாகிஸ்தான் அணி இந்திய தொகுப்பாளரிடம் பேச முடியாது என்று கூறியதுதான்.
லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போது ரவி சாஸ்திரி, தொகுப்பாளராக செயல்பட்டு இரு அணிகளின் கேப்டன்களான சூர்யகுமார் யாதவ், சல்மான் அலி ஆகா ஆகியோரிடம் நேர்காணல் செய்திருந்தார்.

2 months ago
4







English (US) ·