ARTICLE AD BOX

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கில், ‘பிட்காயின்’ மாற்றும் விவகாரத்தில் 6 பேரை காரில் கடத்தி சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. அதில், 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, சுப்புராயன் தெருவில் வசித்து வருபவர் தேசிக மூர்த்தி(50). இவர் ஆயிரம் விளக்கு பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் புரோக்கிங் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி காலை அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்ற தேசிக மூர்த்தி இரவு வீடு திரும்பவில்லை.
மறுநாள், காலை தேசிக மூர்த்தியின் மகன் பரத்(20) செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய நபர்கள், ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்தால் தான் தேசிக மூர்த்தியை உயிரோடு அனுப்புவோம் என கூறி போனை துண்டித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பரத், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

3 months ago
5







English (US) ·