பிரபல பாடகி பிறந்த நாள் விழாவில் கஞ்சா உபயோகித்ததாக வழக்கு!

6 months ago 8
ARTICLE AD BOX

பிரபல தெலுங்கு பின்னணி பாடகி மங்ளி. இவர் தனி இசை ஆல்பங்களை அதிகமாக வெளியிட்டுப் பிரபலமானார். பின்னர் தெலுங்கு சினிமாவில் அவருக்குப் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இவரது பிறந்தநாள் விழா நடைபெற்றது. அதை முன்னிட்டு ஹைதராபாத் அருகே உள்ள ஈர்லபல்லி எனும் இடத்தில் உள்ள சொகுசு பங்களாவில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்தார்.

இதில் இவரது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சுமார் 50 பேர் கலந்து கொண்ட இந்தக் கொண்டாட்டம் விடிய, விடிய நடந்தது. இதனால், அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் நேற்று அதிகாலை 3 மணியளவில் ‘பார்ட்டி’ நடந்த இடத்துக்குச் சென்றனர். அங்கு, வெளிநாட்டு மதுபானங்களும், கஞ்சாவும் உபயோகிக்கப்பட்டது தெரிய வந்தது.

Read Entire Article