ARTICLE AD BOX

புதுக்கோட்டை: பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மாருதி நகரைச் சேர்ந்தவர் எஸ்.வில்லியம் பால்ராஜ்(52). இவர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே குன்னத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் முதுநிலை கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், அங்கு பயிலும் ஒரு மாணவிக்கு கடந்த ஓராண்டாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் முதல்கட்ட விசாரணைக்குப் பிறகு, கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

4 months ago
6







English (US) ·