ARTICLE AD BOX

புதுச்சேரி: புதுச்சேரி காராமணிக்குப்பத்தை சேர்ந்தவர் சந்தோஷ் என்ற தாமஸ் சந்தோஷ் (38). இவர் 2021-ல் மனநிலை பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமை செய்தார்.
இது தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் சந்தோஷ் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, குற்றம்சாட்டப்பட்ட தாமஸ் சந்தோஷுக்கு வாழ்நாள் சிறை தண்டனை, ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும், சிறுமிக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

3 months ago
4







English (US) ·